மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாமல் வீதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலில், திணைக்களத்தின் பதிவுகளில் இடம்பெறாமல் தற்போது பயன்பாட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் அல்லது அவை தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உரிய விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து பதிவுத் தரவுத்தளத்தை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இதற்கமைய, குறித்த மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பின் ஊடாகச் சமர்ப்பித்து ஒத்துழைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
தகவல்களை வழங்குவதற்கான இணைப்பு முதல் கமண்டில் பகிரப்பட்டுள்ளது.








