எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று புதன்கிழமை (10) ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணிவ் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன மற்றும் வஜிர அபேவர்தன உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.