Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து பயணித்தால் இன்னும் சில வருடங்களில் நாட்டுக்கு நியாயமான நிலை ஏற்படும்; அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து பயணித்தால் இன்னும் சில வருடங்களில் நாட்டுக்கு நியாயமான நிலை ஏற்படும்; அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணித்தால் இன்னும் சில வருடங்களில் நாட்டுக்கு நியாயமான நிலை ஏற்படும் எனவும் ரணிலை விடுத்து வேறு யாரும் நாட்டின் தலைவராக வந்தால் நாடு மேலும் மோசமான நிலைக்கு செல்லும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்களின் நீண்ட கால பிரச்சினையான கால்நடை மேய்ச்சல் தரவை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும், கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாக நானாட்டான் பள்ளக்கமம் பகுதியில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

நான் இதுவரை என்னுடைய அரசியல் வாழ்கையில் 7 ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன்.
30 வருடங்களாக நான் எது அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என நினைத்தேனோ, அதுவே தற்போது நாட்டின் தேவையாக உள்ளது. அது கேள்விக் குறியாக இருந்தாலும் அதுவே நடைமுறைக்கு சாத்தியமாக உள்ளது. ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பெடுத்த சமயம் நாட்டின் நிலைமை உங்களுக்கு தெரியும். ஒரு பக்கம் வன்முறை கலாச்சாரமும், இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியான வீழ்ச்சி, மறுபக்கம் வரிசைகளுமாக நாடு இருந்தது.அந்த நிலைமையை ரணில் மாற்றியுள்ளார். ரணில் குறுகிய காலத்தில் நாட்டில் நிலவி வந்த சில முக்கிய பிரச்சினைகளை தீர்த்தார். வரிசைகளை இல்லாமல் செய்தார்.பொருட்களின் விலை அதிகரித்திருந்தாலும் தட்டுபாடுகள் இன்றி பொருட்கள் கிடைக்ககூடிய ஏற்பாட்டை செய்துள்ளார்.

எனவே நாம் அவருடன் சேர்ந்து பயணித்தால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் ஒரு தரமான தீர்வை தருவார். அவரை விடுத்து வேறு யாரும் நாட்டின் தலைமைக்கு வந்தால், நாடு இன்னும் மோசமான நிலைக்கே செல்லும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. தெற்கில் உள்ள பல தலைவர்களுக்கு கொள்கையும் இல்லை. திட்டங்களும் இல்லை. ஆனால் ரணிலால் மட்டுமே இங்கு பல விடயங்கள் சாத்தியமாகும் எனவே, அவருடன் இணைது செயற்படுவதே எனது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
Next Post
தாய்வான் அதிபர் தேர்தலில் வில்லியம் லாய் சிங் தே வெற்றி!

தாய்வான் அதிபர் தேர்தலில் வில்லியம் லாய் சிங் தே வெற்றி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு