Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று! – (கட்டுரை)

உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று! – (கட்டுரை)

3 years ago
in சிறப்பு கட்டுரைகள், செய்திகள்

உழவர் திருநாளாம் தைத்திருநாளானது உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நன்றியைப் பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டு உழவர் திருநாள் ஆகும்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்குˮ என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க மனிதர்களிடம் மட்டுமல்லாது விலங்குகளுக்கும் நன்றி காட்டும் வகையில் மாடுகள்⸴ வயல்கள்⸴ பண்ணை உள்ளவர்கள் இந் நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வர். உழவர் திருநாள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வரலாற்று நோக்கு
உழவர் தொழிலே அதிகம் பெருமையாக பேசப்படுகின்ற தொழிலாகும். ஆடி மாதத்தின் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

இந்நாளில் புதுப்பானை வைத்து அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் சக்கரை⸴ பால் இட்டுப் பொங்கி சூரியனுக்கும்⸴ மாட்டுக்கும் படைக்கும் திருநாளாகும்.

விவசாயமே வாழ்வியலுக்கு இன்றியமையாததாகும் அதை போற்ற வேண்டும் என்பதே இத்திருநாளில் தார்ப்பரியம் ஆகும்.

பயிர்கள் செழித்து வளரவும் உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கும் சூரிய ஒளி முக்கியமானதாகும். இதனால் தான் இந்நாளில் சூரிய தேவனை வணங்கி பொங்கலிட்டு படையல் இடுவர். அத்தோடு விவசாயத்திற்கு உறுதுணையாய் இருக்கும் மாடுகளுக்கும்⸴ பால் தரும் மாடுகளுக்கும் பட்டிப் பொங்கல் இடுவது தமிழர்களின் சம்பிரதாயம் ஆகும்.

மாட்டுப் பொங்கலின் சிறப்புகள்
மாடுகள் அனைத்தும் கொம்புகள் சீவிக் கொம்புகளில் வண்ணம் பூசப்படும். கூரான கொம்புகளில் சலங்கை அல்லது குஞ்சம் கட்டப்படும். திருநீறு பூசி குங்குமம்⸴ மஞ்சள் இடப்படும். புதிதாக மூக்கணாங் கயிறு தாம்புக் கயிறு என்பனவும் அணிவிக்கப்படும்.

அத்தோடு உழவர் கருவிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு திருநீறு⸴ குங்குமம்⸴ சந்தனம் பூசப்படும். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி காளைகள்⸴ பசுக்கள் அனைத்திற்கும் பொங்கல்⸴ பழம்⸴ கரும்பு முதலானவை கொடுக்கப்படும்.

தமிழர் வாழ்வியலும் உழவர் திருநாளும்
தமிழர்களின் வாழ்வியலில் அறிவியல் அர்த்தமும்⸴ தார்ப்பரியமும் கொண்டு விளங்குகின்றது. நம் முன்னோர்கள் இயற்கையை நேசிப்பதும் அதனோடு ஒன்றிணைந்து வாழ்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இதனாலே தான் உழவர் திருநாளில் சூரியனுக்கும்⸴ மாடுகளுக்கும் நன்றி கூறும் வகையில் கொண்டாடிக் சிறப்பிக்கின்றனர்.

இவற்றைப் போற்றிப் பேணும் போது தான் உழவுத் தொழிலும்⸴ வயலும் செழிக்கும். உழைப்பின் செழிப்பைத் தானும் தன்னை சார்ந்தவர்களுக்கும் கொடுத்து இயற்கையை நேசித்து வாழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு
தமிழர் கலாச்சாரத்தில் பல வீர விளையாட்டுக்கள் தொன்றுதொட்டு இடம் பிடிக்கின்றன. அதன்படி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஐல்லிக்கட்டு⸴ ஏறுதழுவல் போன்ற கலாச்சார விளையாட்டுக்கள் உழவர் திருநாளில் நடத்தப்படுகின்றன.

ஐல்லிக்கட்டில் காளைகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு பிரசித்தி பெற்றதாகும்.

மக்கள் வாழ்வில் ஒன்றிணைந்துள்ள உழவுத் தொழிலையும்⸴ அது சார்ந்த சூரியன்⸴ மாடு முதலானவற்றையும் சிறப்பிக்கும் உழவர் பண்டிகையான தைத்திருநாள் தமிழர்களின் பெருமையையும்⸴ நன்றி மறவாமைப் பண்பையும் உலகிற்கு காட்டுகின்றது. இதன் தாற்பரியத்தை உணர்ந்து உழவர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

தொடர்புடையசெய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
Next Post
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தோற்கடிக்க வேண்டும்; பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தோற்கடிக்க வேண்டும்; பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.