Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த ஊழியர் கைது!

இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த ஊழியர் கைது!

3 years ago
in செய்திகள்

கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் தொண்டை, காது, மூக்கு சத்திரசிகிச்சை பிரிவு பெண் வைத்தியர்கள் உடை மாற்றும் அறையில் நவீன கையடக்க தொலைபேசியை மறைத்து வைத்து நுட்பமான முறையில் காணொளி பதிவு செய்ததாக கண்டி தலைமையக பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சுகாதார உதவியாளர் தொண்டை, காது, மூக்கு அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர் என்றும், கடந்த 12ம் திகதி குறித்த இடத்தில் உடை மாற்றிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் மிகவும் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த குறித்த கைப்பேசியை கண்டுபிடித்துள்ள நிலையில் பின்னர் ஏனைய வைத்தியர்களுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் ஏனைய வைத்தியர்கள் கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்து கைப்பேசியை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த கைப்பேசி காணொளிகளை ஆய்வு செய்ததில், இந்த கைப்பேசியை பயன்படுத்தி நீண்ட காலமாக வைத்தியர்கள் உடை மாற்றுவதை குறித்த நபர் காணொளி பதிவு செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

விசாரணையின் பின்னர், கைப்பேசியை வைத்திருந்த சுகாதாரப் பணியாளரை கைது செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரையின் பேரில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தேவிந்தி விக்கிரமசிங்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தொடர்புடையசெய்திகள்

1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!
செய்திகள்

1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!

November 4, 2026
ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!
செய்திகள்

ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!

November 4, 2026
காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!
செய்திகள்

காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!

November 4, 2026
ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!
செய்திகள்

ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!

November 4, 2026
அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!
செய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!

November 4, 2026
நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!

November 4, 2026
Next Post
தனிப்பெரும் அடையாளமாக பொங்கல் திருநாள் திகழ்கிறது; கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து செய்தி!

தனிப்பெரும் அடையாளமாக பொங்கல் திருநாள் திகழ்கிறது; கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு