Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி கற்கைநெறி இறுதி நாள்; பிரதேச செயலகத்தில் கலைவிழா நிகழ்வு!

மட்டு அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி கற்கைநெறி இறுதி நாள்; பிரதேச செயலகத்தில் கலைவிழா நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா நேற்று (20) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

அரச உத்தியோத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 19 நாள் இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அதிதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது 150 மணித்தியால கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்தது.

நாடளாவிய ரீதியில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களில் கடமையாற்றும் 65 அரச உத்தியோகத்தர்கள் இக்கற்கைநெறியினை பூர்த்தி செய்திருந்தனர்.

இந்த நிகழ்விற்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாக கிராம சேவை உத்தியோகத்தர், மாவட்ட செயலகத்தின் இரண்டாம் மொழி கற்கையின் இணைப்பாளர் வி.சந்திரகுமார், பயிற்சி நெறியின் வளவாளர்களான மாணிக்கவாசகம், செல்வி.எம்.கே.திலினி மதுசிகா, திருமதி.சுதேசி தில்ருக்சி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன
அரசியல்

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

June 15, 2026
கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
Next Post
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை திட்டம்!

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு