நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய நடவடிக்கை’ என்பது நாடகம் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா குற்றம் சுமத்தி உள்ளார்.
பெலியத்தவில் இன்று காலை அரசியல் கட்சித் தலைவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அது குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடந்த வருடங்களில் தனது கடமைகளை திறம்படச் செய்திருந்தால் இவ்வாறான பெரிய அளவிலான நடவடிக்கை தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.