நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பல வீடுகளிலுள்ள தொலைப்பேசிகளுக்கு அழைப்பெடுத்து, தம்மை பொலிஸார் எனக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முற்படும் கும்பலொன்று தலைமறைவில் இயங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, முல்லேரியா, நவகமுவ பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு இதுபோன்ற அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் எனக் கூறி பணம் பறிக்க அழைப்பு விடுக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.