Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிடமும் 11 கோரிக்கைகளை முன்வைத்துள்ள வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு!

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிடமும் 11 கோரிக்கைகளை முன்வைத்துள்ள வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு!

1 year ago
in அரசியல், செய்திகள்

ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வான தீர்வை பெறுவதற்காக நாங்கள் முன்வைக்கும் 11 கோரிக்கைகளை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா நேற்று (25) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசிய அரசியலின் வரலாற்றிலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் முதன்முதல் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவு செய்வது ஜனநாயகப் பண்பை வரவேற்பதோடு இது நிலைத்திட வேண்டும்.

இலங்கை நாட்டின் உள்ளக அரசியல், பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச சூழல் ஆகியன சிக்கல்மிக்கதாகக் காணப்படும் தற்போதைய சூழலில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னால் பாரிய கடப்பாடுகள் உள்ளது. வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப வேண்டும்.

உணர்ச்சிகரமான அரசியல் என்பது நாம் எமது சுய தேசிய உணர்ச்சிகளுக்கு தீனி போடுவது மாத்திரமேயாகும். இது தமிழ் தேசத்தை ஏனைய சமூகங்களிடமிருந்து அந்நியப்படுத்துவதுடன் தமிழ் தேசம் தனது நியாயாதிக்கத்தை சர்வதேச அளவில் இழக்கவும் காரணமாகிறது. தமிழ் தேசிய அரசியலை அறிவுபூர்வமான நவீன அரசியல் கொள்கைகளுடன் கூடிய அரசியலாக பரிணமிக்கச் செய்யவேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.

வடக்கு கிழக்கு பிரதேசத்தை தமது தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கும், அதேபோல் இப்பிரதேசத்தை தமது பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மையினராக பல காலமாக எல்லையோரக் கிராமங்களில் வாழந்து வரும் சிங்கள மக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய கடப்பாட்டை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தமிழ்த் தேசிய அரசியலையும் தழிழ் மக்களையும் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்களிடமிருந்து பிரிக்காதவாறு கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில், தமிழ் தேசிய அரசியல் தலைமைத்துவங்கள் சார்ந்து சந்தேகங்கள் எழாதவாறு உறவுகளை வெளிப்படைத் தன்மையுடன் பேணவேண்டிய பொறுப்பு காணப்படுகிறது

வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தில் காலங்காலமாகக் காணப்பட்டுவரும் ‘சமூக ஊனங்களான’ யாழ் மேலாதிக்கவாதம், பிரதேசவாதம், மத ரீதியான வெறுப்புணர்வுகள் மற்றும் புறக்கணிப்புகள், சாதிய அடக்குமுறை, ஆணாதிக்கம் ஆகிய பிற்போக்கான போக்குகளிலிருந்து தமிழ் சமூகத்தின் சிந்தனையை மாற்றி, சமூக சமத்துவ சிந்தனையைக் கட்டியெழுப்புவதன் மூலம் மாத்திரமே தனக்கான எதிர்காலம் குறித்து விஞ்ஞானபூர்வமாக சிந்திக்கும் ஆற்றல்கொண்ட உறுதியான தமிழ்த் தேசத்தை கட்டியெழுப்ப முடியும். அத்தகைய ஒரு மக்கள் சமூகத்தால் மாத்திரமே தனது அரசியல் இலக்குகளை அடையமுடியும். இதை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமது அடிப்படைக் கொள்கையாக ஏற்கவேண்டும்.

சிங்கள இனவாத அடக்குமுறைகளின் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வாழும் மலையகத் தமிழ்மக்களின் வழித்தோன்றல்கள் வடக்கு கிழக்கின் மக்கள் வாழ்வியலுடன் பிணைந்துவிட்டனர். இந்தப் பிணைப்பில் சிறு கீறல்கூட ஏற்படுத்தாவண்ணம் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.

தமிழரசுக் கட்சி அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிலும் பெண்கள் மற்றும் இளையோரின் பங்கேற்புக்கு கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன. தழிழ் அரசியல் தளத்தில் முற்போக்கான ஜனநாயகமான சிந்தனைகள் பரிணமிக்காது தமிழ்த் தேசிய அரசியல் தளம் முடங்கிக் கிடப்பதற்கு இது முக்கிய காரணமாகும். தமிழ்க் கட்சிகள் தமது அங்கத்துவ எண்ணிகையை உயர்த்தி மக்கள் மயப்பட்ட கட்சிகளாக தமது கட்சிகளை மாற்ற வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் பல்வேறு சக்திகளும் தமிழ் அரசியலில் தமது செல்வாக்கைச் செலுத்த முயல்கின்றனர். இவர்களின் ஆளுகைக்கு உட்படாது, வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தில் வேரூன்றி தமது உரிமைக்காக அன்றாடம் போராடிக்கொண்டு வாழுந்துவரும் மக்களின் நலன்களையே தமிழ் அரசியல் கட்சிகள் பிரதிபலிக்க வேண்டும்.

அரச இனவாதத்துக்கு சரணடையாத கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும்,

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சிதறிக் கிடக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளவும் பலப்படுத்த வேண்டும். ஆபிரிக்க தேசிய காங்கிரசில் காணப்பட்ட கூட்டுப் பலமே தென்னாபிரிக்க மக்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த உண்மையை தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்றாக வேண்டும்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையான, ‘ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு’ என்பதை தமது இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும்.

இந்த 11 கோரிக்கைள் தொடர்பாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கைகளை உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர
செய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர

May 19, 2025
சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 19, 2025
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு
அரசியல்

முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு

May 19, 2025
திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
செய்திகள்

திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

May 19, 2025
ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

May 19, 2025
தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
Next Post
தாயின் விலா எலும்புகளை 22 துண்டுகளாக உடைத்து கொலை செய்த மகன் கைது?

தாயின் விலா எலும்புகளை 22 துண்டுகளாக உடைத்து கொலை செய்த மகன் கைது?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.