விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயகினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கலாநிதி ரோஷனி திசாநாயகவிடம் கையளித்துள்ளார்.
கலாநிதி ரோஷனி திசாநாயக, இதற்கு முன்னர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராகவும், இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.








