ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடைமுறைப்படுத்தும் சிவில் சமூக தலைவர்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சமூக செயற்பாட்டாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நேற்று காத்தான்குடியில் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஷிஹார் அனீஸ், கலாநிதி எம்.சி.ரஸ்மின், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சமூக செயற்பாட்டாளர்கள் 25 பேர் இதில் பங்கேற்றனர்.
பங்கு பற்றியோருக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிர்வாக உறுப்பினர்களான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா மற்றும் சாஹீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.