இந்தியாவில் நடைபெற்று வரும் BIMSTEC கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கை கடற்படையின் SLNS கஜபாஹு கப்பலில் கடமையாற்றிய கொமாண்டர் எஸ்.ஏ.எஸ்.எம். சமரகோன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த நவம்பர் 2ஆம் திகதி இந்தியாவின் ஸ்ரீ விஜயபுர பகுதியில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிகாரியின் எதிர்பாராத மரணம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவித்துள்ளது.
BIMSTEC கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருந்த இலங்கை கடற்படைக் குழுவின் உறுப்பினராக அவர் செயற்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த அதிகாரியின் சடலம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130 ரக சிறப்பு விமானம் மூலம் நேற்று (03) கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








