Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
9 ‘A’ சித்தி பெற்ற 17 வயது மகன் – போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தாயை தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம்!

9 ‘A’ சித்தி பெற்ற 17 வயது மகன் – போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தாயை தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போதைப்பொருள் உட்கொள்வதற்காகத் தாயிடம் பணம் கேட்டு மிரட்டிய யாழ்ப்பாணம், அச்சுவேலி – புத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மகன், தாய் பணம் தராததால் கோபமடைந்து, கடந்த 14ஆம் திகதி தாயைத் தடியால் அடித்துக் கொன்றுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், அச்சுவேலி புத்தூர் மேற்கு, சிவ தேவாலய வீதியில் வசித்து வந்த 74 வயதுடைய பெண் ஆவார்.

இவரது மகன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று, கடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் (G.C.E. O/L) 9 ‘A’ சித்திகளைப் பெற்ற திறமையான மாணவனாவார். பாடசாலைக் காலத்தில் போதைப்பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவனையும் அவனது இரு நண்பர்களையும் அதிபர் பாடசாலையிலிருந்து நீக்கியிருந்தார்.

எனினும், போதைப்பொருளுக்கு அடிமையான இம்மாணவன், வழக்கமாகத் தாயிடம் பணம் பெற்றுப் போதைப்பொருள் உட்கொண்டு வந்த நிலையில், சம்பவத்தன்று தாய் பணம் தராததால் அவரைத் தடியால் தாக்கிக் கொலை செய்துள்ளான். தாய் வாழ்வதற்காக வெளிநாடுகளில் உள்ள ஏனைய பிள்ளைகள் பணம் அனுப்பி வந்துள்ளதாகவும், அந்தப் பணத்தில் பாதியை மகன் தாயை மிரட்டிப் பெற்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்டு வந்ததாகத் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் குறித்த வீட்டைச் சோதனையிட்டபோது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

September 18, 2026
புகையிரத பொது முகாமையாளர் நீக்கம் கோரி தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!
செய்திகள்

புகையிரத பொது முகாமையாளர் நீக்கம் கோரி தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

September 18, 2026
பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
உலக செய்திகள்

பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு

September 18, 2026
‘பாணந்துறை குடு சலிந்து’ கும்பலின் பணப் பொறுப்பாளர் தம்பதி கைது – ஹெரோயினுடன் 63 இலட்சம் ரூபாய் பறிமுதல்!
செய்திகள்

‘பாணந்துறை குடு சலிந்து’ கும்பலின் பணப் பொறுப்பாளர் தம்பதி கைது – ஹெரோயினுடன் 63 இலட்சம் ரூபாய் பறிமுதல்!

September 18, 2026
சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

September 18, 2026
சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
Next Post
பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு

பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு