பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இது ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 2 வர்த்தமானி அறிவித்தல்களும் நேற்று வெள்ளிக்கிழமை (2) அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.
முதலாவது வர்த்தமானி அறிவித்தலில் படி அமைச்சர் லொஹான் ரத்வத்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.