தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் 9ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







