Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முற்பட்ட போது கைவிலங்குகளை கழற்றி விட்டு தப்பிச்சென்ற கைதி!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முற்பட்ட போது கைவிலங்குகளை கழற்றி விட்டு தப்பிச்சென்ற கைதி!

3 years ago
in செய்திகள்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முற்பட்ட போது இரு சந்தேக நபர்களில் ஒருவர் மற்றுமொரு சந்தேக நபரை தாக்கி கைவிலங்குகளை கழற்றி விட்டு தப்பிச்சென்றுள்ளார். இவ்வாறு தப்பிச் சென்றவர் களுத்துறை – அளுத்கம பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் திருட்டு சம்பவம் தொடர்பில் களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது.

இதனையடுத்து இவரை கைது செய்த பொலிஸார் மற்றுமொரு சந்தேக நபருடன் கைவிலங்கிட்டு அளுத்கம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவரின் பாதுகாப்பில் ஜீப் ரக வண்டியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது பொலிஸார் இரு சந்தேக நபர்களையும் நீதிமன்ற வளாகத்தில் ஜீப்பில் இருந்து இறக்க முற்பட்டபோது குறித்த சந்தேக நபர் மற்றுமொரு சந்தேக நபரை தாக்கி கைவிலங்குகளை கழற்றி ஜீப்பில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது அவர்களை அழைத்துச் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் , நீதிமன்றில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் சந்தேக நபரை துரத்திச் சென்ற போதும் அவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!
செய்திகள்

கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

August 6, 2026
திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

August 6, 2026
Next Post
கற்பிட்டியில் இரு முச்சக்கரவண்டிகள் விபத்து; ஸ்தலத்தில் ஒருவர் பலி, 7 பேர் காயம்!

கற்பிட்டியில் இரு முச்சக்கரவண்டிகள் விபத்து; ஸ்தலத்தில் ஒருவர் பலி, 7 பேர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு