Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஓட்டமாவடியில் அழிக்கப்பட்ட இந்து கோவிலை வேறு காணி பெற்று கட்டித்தரவேண்டும்!”;ஹிஸ்புல்லாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஈரோஸ் பிரபா

“ஓட்டமாவடியில் அழிக்கப்பட்ட இந்து கோவிலை வேறு காணி பெற்று கட்டித்தரவேண்டும்!”;ஹிஸ்புல்லாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஈரோஸ் பிரபா

1 hour ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஓட்டமாவடியில் அழிக்கப்பட்டு அபகரித்து அதில் பள்ளிவாசல் மற்றும் மீன் சந்தை கட்டிய இந்து ஆலயத்திற்கு உரிய காணி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா எதிர்வரும் ஜனவரி 14ம் திகதிக்கு முன் தர வேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் அதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தமிழ் மக்களையும் இஸ்லாமிய மக்களை கூறு போடுகின்ற இனவாத செயற்பாட்டை நிறுத்தவேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் புதன்கிழமை (4) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மௌனம் காத்து வருவதை விட்டுவிட்டு ஓட்டமாவடியில் அழிக்கப்பட்டு ஆக்கிரமித்து அதில் மீன் சந்தை கட்டிய தமிழ் மக்களின் பாரம்பரிய சொத்தான இந்து ஆலயத்திற்கு உரிய காணியை உடனடியாக தந்து கோயிலை கட்டித்தர வேண்டும்.

இந்த காணி தனியார் சொத்து என நீங்கள் எழுதி நீங்கள் வைத்துக் கொண்டுள்ள கடிதங்கள் என்னிடம் உள்ளது இருந்தபோதும் இது தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம் இந்த காணி இன்று ஓட்டுமாவடி தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மத்தியில் இருக்கின்றதுடன் அதில் பள்ளிவாசல் மற்றும் மீன் சந்தை கட்டியுள்ளதால் இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஒரு இந்து ஆலயத்தை கட்டி தர கேட்குமளவுக்கு தமிழ் மக்கள் பண்பு கெட்டவர்கள் இல்லை.

ஆகவே நாங்கள் கேட்டுக் கொள்வது வாழைச்சேனை-ஓட்டுமாவடிக்கு செல்லும் பிரதான பாதையில் ஒரு காணியை பெற்று தந்து அதில் அந்த கோயிலை உடன் கட்டித்தர வேண்டும். இதற்கு ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா பதில் சொல்ல வேண்டும் அதேவேளை தமிழ் மக்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்ற ஈரோஸ் விடாது.

தமிழ் மக்களுக்கு எங்கு பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்றதோ அங்கு ஈரோஸ் நிற்கும். ஆகவே ஹிஸ்புல்லா காலம் தாழ்த்தாது ஒரு குழுவை ஏற்படுத்துங்கள் நாங்களும் ஒரு குழுவை ஏற்படுத்தி இரண்டு பக்கமும் பேசி அந்த அபகரிக்கப்பட்ட கோயில் காணியை எந்த இடத்தில் பெற்றுத்தரலாம் கோயில் கட்டித் தரலாம் என பள்ளிவாசல் தலைவர்கள், ஹிஸ்புல்லா உட்பட பள்ளிவாசல் சம்மேளன தலைவர்கள் கலந்தாலோசித்து முடிவுக்கு வரவும்.

இதில் நீங்கள் கவனம் செலுத்தாமல் இருந்தால் அடுத்த வருடம் 2027 ஜனவரி மாதம் 14 ம் திகதிக்கு பின்னர் இந்த அபகிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வோம் எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றது.

அதேவேளை கல்முனையைச் சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் முஸ்லிம் என தமிழ் மக்களையும் இஸ்லாமிய மக்களை கூறு போடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனத்தில் இருந்து கல்முனை பிரதேசத்தில் தமிழ் பிரதேசங்கள் அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டு இஸ்லாமாபாத் என்ற நகரத்தை உருவாக்கிய வரைக்கும் இன்று வரை இனவாதத்தைக் கக்கி கொண்டிருக்கிறார்.

அவர் இஸ்லாமிய மக்களை தமிழ் மக்கள் அழித்ததாகவும் நில அபகரிப்பு செய்ததாகவும் தெரிவித்து வருகின்றார் எனவே ஒன்றை அவர் விளங்கி கொள்ள வேண்டும் தமிழர்கள் பண்பு கெட்டவர்கள் இல்லை .

1985 ம் ஆண்டு தொடக்கம் இஸ்லாமியர்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட புள்ளிவிபரம் தொடர்பாக தெரிவித்தால் உங்களால் பதிலளிக்க முடியாது. இஸ்லாமிய மக்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் சிறை செல்ல வேண்டியவர்களாக இருக்கும் நாங்கள் அதை தோண்டி எடுக்கவில்லை.

மட்டக்களப்பில் ஓட்டுமாவடியை அண்மித்த கிராமமான நாவலடி, பிள்ளையாரடி இந்த இரண்டு கிராமமும் இந்தியாவில் அத்திபட்டி கிராமம் எவ்வாறு காணாமல் போனதே அதேபோல மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த கிராமங்கள் காணமல் ஆக்கப்பட்டது.

இங்கு 1983 ம் ஆண்டு குடியிருந்த தமிழ் மக்களை வெட்டி அங்கு வயல் பிரதேசத்தில் கூறு போட்ட சரித்திரம் அதற்கான ஆதாரம் உள்ளது. இன்று அங்கு கிறிஸ்தவ ஆலயம், பிள்ளையார் கோயில் மட்டும் உள்ளது. அதேபோல் அம்பாறை திராய்க்கேணியில் 156 பேரை வெட்டி கோயிலில் புதைத்தது, வீரமுனையில் கோவிலில் வெட்டி படுகொலை செய்தது. சொறிக்கல்முனையில் அகதிகள் முகாமில் ஜிகாத் படை புகுந்து வெட்டி கொலை செய்த சரித்திரம் உள்ளது

சாய்ந்தமருதில் இருந்த விஷ்ணு கோயில் 1956 ம் ஆண்டு நடந்த விசேட பூசையில் எடுக்கப்பட்டு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இந்த கோயில் அதன் பின்னர் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன ஆனால் வடக்கு கிழக்கில் எந்த பள்ளிவாசலும் தமிழ் மக்கள் அழிக்கவில்லை அவ்வாறு ஆதாரமாக பல உள்ளதுடன் இவ்வாறு பல படுகொலைகள் தமிழ் மக்கள் மீது இடம்பெற்றுள்ளது இதனை தோண்ட வரவில்லை இன துவேசத்தை நாங்கள் கக்க வரவில்லை.

இன்று சிங்கள மக்கள், தமிழ் மக்கள், இஸ்லாமிய மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனை கூறு போட கடந்த காலத்தில் ஆட்சி செய்து வந்த கூட்டமும் அதனை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ கூட்டம் இன துவேசத்தை கட்டி அரசியல் செய்ததே தவிர மக்களிடையே இன ஒற்றுமையை ஏற்படுத்திய சரித்திரம் இல்லை.

இன்று அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் கிடைத்த பொன்னான அரசாங்கம் அனுர அரசாங்கம். இந்த அரசில் இனத்துவேஷம் பாகுபாடு, போன்ற எந்த நடைமுறையும் இல்லை. அனைவருக்கும் சட்டம் சமம் உதாரணமாக சிறையில் அடைக்கப்பட்ட 64 பிக்குகளுக்கு சிறைச்சாலையில் எந்த உடை போடவேண்டுமோ அது பிக்குகளுக்கும் போடப்பட்டுள்ளது. இந்த அரசு இன ஒற்றுமையை ஏற்படுத்தி வருகிறது. துவேசத்தை துண்டி அரசை வீழ்த்தி மீண்டும் கொலை கலாச்சாரத்தை கொண்டு வர சில பிக்குகள், எதிர்க்கட்சிகள் சதி செய்து கொண்டிருக்கின்றனர்.

பொம்மையை கட்டி சூனியம் வைத்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இப்போ நல்ல பாம்பு படத்துடன் நடந்து செல்கின்றார். இவர்கள் அந்த காவியை கட்டினால் ஏதும் இந்த நாட்டில் செய்யலாம் என்று எனவே அனுர அரசிடம் வேண்டுகோள்; சட்டம் அனைவருக்கும் சமம் எனில் இந்த தேரர்கள் சிறைக்கு போக வேண்டும்.

அதேவேளை இந்த அனுர அரசு எனக்கு மாமனே மச்சானே அல்ல அதேவேளை இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டால் முதல் முதல் அதற்கு எதிராக குரல் கொடுப்பவனாக இந்த ஈரோஸ் பிரபா இருப்பான் என்பதுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் அதேவேளை இந்த இனவாத செயற்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை
செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை

November 5, 2026
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!
செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

November 5, 2026
யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!

November 5, 2026
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!

November 5, 2026
தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!

November 5, 2026
208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1500 பேர் பணியிடை நீக்கம்
செய்திகள்

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1500 பேர் பணியிடை நீக்கம்

November 5, 2026
Next Post
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.