இலங்கையில் சீன தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றும் இலவச ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளது. ‘சைனிஸ் குளோபல்ரெலிவிசன் நெற்வேர்க்’ என்ற அலைவரிசையை பரீட்சார்த்தமாக சேவையை ஆரம்பித்துள்ளது.
அரச தொலைக்காட்சி சேவைகளான ரூபவாகினி, ஐ, நேத்ரா ஆகிய ஒரே குழும தொலைக்காட்சி அலைவரிசைகள் யூ.எச்.எவ் இல் ஒளிபரப்பாகின்றன. இதேபோன்றே சீன தொலைக்காட்சியும் ஒளி பரப்பாகவுள்ளது. கடந்த பெப்ரவரியில், இந்த ஒளிபரப்பு சேவை பங்காளிகளை கோரியது. இதன்போது சீன ஒளி பரப்பு சேவை அதனை தம் வசப்படுத்தியிருக்க லாம் என்று நம்பப்படுகின்றது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்துக்கு 5 இடங்களில் அலை வரிசை கோபுரங்கள் உள்ளன. அவை, கொழும்பு, மடேல்சிம் ( ஊவா) கொக்காவில், முல்லைத்தீவு. யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ளன.
இந்த வழியிலேயே சீன தொலைக்காட்சி முன்னர் ஓர் தொலைபேசி நிறுவன இணைப்பு மூலம் கட்டண சேவையில் இயங்கியது. தற்போது இலவச சேவையாக ஒளிபரப்பப்படுகிறது. சீன தொலைக்காட்சி சேவை இலங்கைக்கு வெளியே புற நாடு ஒன்றில் இருந்து ஒளிபரப்பாகும் சமயம் – செய்மதி அலைவரிசை ஊடாக இலங்கைக்கு கடத்தப்பட்டு இங்கே ஒளிபரப்பப்படுவதாக தெரியவருகின்றது. இதேநேரம் நாடு முழுவதும் கேபிள் இணைப்பு சேவை மூலமும் இந்த சேவை ஒளிபரப்பாகவுள்ளது.
நாட்டில் சில அலைவரிசைகளை மட்டும் இலவசமாக பார்வையிட முடியும். இதேநேரம் சீனத் தொலைக்காட்சி
அலவரிசை இலவசமாக ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.