Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் பொலிஸாரின் உத்தரவையும் மீறி நிர்மாணிக்கப்படும் கட்டுமானங்கள்!

மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் பொலிஸாரின் உத்தரவையும் மீறி நிர்மாணிக்கப்படும் கட்டுமானங்கள்!

3 years ago
in செய்திகள்

மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் பொலிஸாரின் உத்தரவையும் மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்றத்தின் போசகர் பொ.சச்சிவானந்தம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூதூர் ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த காணியானது நீண்டகாலமாக இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மன்றத்திற்கு சொந்தமான குறித்த காணியை சிலர் பொய்யான ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயல்கின்றார்கள் இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்திலும், திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 10 ஆம் திகதி குறித்த தரப்பினர் உட்பட, முறைப்பாட்டாளர்களையும் மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அழைத்து விசாரணை இடம்பெற்றது.

இதன்போது, ஆவணங்களை பார்வையிட்ட பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்ட நபர்களை காணிக்குள் நுழையக்கூடாது என எச்சரித்ததோடு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளுமாறும் மன்றத்தினரை பணித்திருந்திருந்தார். அதற்கமைய கடந்த மாதம் 26 ஆம் திகதி விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த காணியினுள் பொலிசாரின் உத்தரவையும்மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த செயற்பாடானது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எனவும், குறித்த நபர்கள் இது போன்ற பல குற்றங்கள் செய்தது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என விசாரணையின்போது பொலிஸார் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்ட செயலாளர் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் எழுத்து மூலமாக மன்றம் அறிவித்துள்ளதுளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
பொலிஸார் தாக்கியதாக முறையிட்ட மாணவனை கைது செய்ய நடவடிக்கை!

பொலிஸார் தாக்கியதாக முறையிட்ட மாணவனை கைது செய்ய நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு