Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேடைக்கு அருகில் கூடியதால் குழப்பம்! ;இடைநிறுத்தப்பட்ட ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி மீண்டும் நடைபெறுமா?

மேடைக்கு அருகில் கூடியதால் குழப்பம்! ;இடைநிறுத்தப்பட்ட ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி மீண்டும் நடைபெறுமா?

3 years ago
in சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (09) இரவு 6:30 மணியளவில் ஆரம்பமான இந்த இசை நிகழ்வில் குழப்பம் ஏற்பட்ட காரணமாக, இரவு 9 மணியளவில் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாட்டு குழுவினர் இடைநிறுத்தியுள்ளனர்.

சரியான ஏற்பாடு இன்மை, பொலிஸாரின் பற்றாக்குறை மற்றும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதாலும் இந்த இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

25000 ரூபா அனுமதிச் சீட்டு, 7000 ரூபா அனுமதிச் சீட்டு, 3000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்தும் அதன் பின்னர் இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது.

முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும், போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன்,தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடந்தது.

இதன் போது திரை நேரடி ஒளிபரப்பிற்காக கேமராவை இயக்கிக்கொண்டிருந்தவர் நின்றுகொண்டிருந்த தாங்கியில் முன்னே வந்தவர்கள் ஏறியதால், திரை நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதுடன், பொலிஸாருக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்ட காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதேசமயம் அனுமதிச் சீட்டு கொள்வனவு செய்து நிகழ்ச்சியை பார்வையிட வந்தவர்களது பணம் மீள கொடுக்கப்படுமா அல்லது மீண்டும் இசைநிகழ்ச்சி யாழில் நடைபெறுமா என்பது குறித்த அறிவிப்பை ஏற்பாட்டு குழுவினர் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
Next Post
இலத்திரனியல் பாதணியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

இலத்திரனியல் பாதணியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு