எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் சீனித்தம்பி சத்யநாதன் அவர்கள் ஓய்வு பெற்று செல்லும் நிகழ்வு நடைபெற்றது..
தனது 36 வருட கல்வி சேவையின் பின்னர் நேற்றைய தினம் (09) எருவில் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலய கல்வி பணிப்பாளர் சி.ஸ்ரீதரன், பாடசாலையினுடைய பிரதி அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அதிபர் சி.தீபதர்சன் மற்றும் ஏனைய பாடசாலை பிரதி அதிபர்கள் மற்றும் ஆலய உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், கழகங்கள் மற்றும் பொது அமைப்பு ஒன்றியங்கள் போன்றவற்றினுடைய பிரமுகர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
அதேசமயம் மறைந்த சமூக ஜோதி இளங்குமார் அவர்களின் நினைவாக அவரது மனைவி திருமதி நிவேதனா இளங்குமார் அவர்களுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலையின் முன் நுழைவாயில் சிறப்பாக அமைக்கப்பட்டு நேற்றைய தினம் திறப்பு விழாவும் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.