கொழும்பில் செயற்படும் ஹோட்டல் ஒன்றுக்கு மாளிகாகந்த பிரதான நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம நேற்று 50,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
சமைத்த உணவில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற மற்றும் பூஞ்சை பிடித்த மிளகை வழங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் சார்பில் ஆஜரான ஹோட்டலின் உணவு மற்றும் குளிர்பான மேலாளர் தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மத்திய கொழும்பு சுகாதார மருத்துவ அலுவலகத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 02 ஆம் திகதி Cinnamon Lakeside Colombo ஹோட்டலில் இரவு உணவருந்தச் சென்ற தம்பதியர் தமக்கு கெட்டுப்போன சூப்பை வழங்கியதாக கோட்டை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதற்கமைய, இந்த வழக்கு தாக்கப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.