Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு; தமிழர் பகுதியில் சம்பவம்!

கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு; தமிழர் பகுதியில் சம்பவம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண், குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

குறித்த பெண்ணைக் காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள் கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று காலை 8 மணியளவில் வீட்டுக் கிணற்றுக்குள் சடலமாக இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் டெனிஸ்ரன் கீர்த்தனா என்ற 29 வயதுடைய குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு எதிர்வரும் பங்குனி 5ஆம் திகதி மரண விசாரணைக்காக எடுத்து கொள்ளப்படும் எனவும், இவ் மரணம் தொடர்பில் யாரும் சாட்சி சொல்ல விரும்பினால் நீதிமன்றத்திற்கு வருகை தந்து சாட்சியம் அளிக்கலாம் எனவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் அவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன் மரண பரிசோதனையின் பின்னர் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!

October 10, 2026
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!
செய்திகள்

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

October 10, 2026
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

October 10, 2026
களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!
செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!

October 10, 2026
அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!
செய்திகள்

அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!

October 10, 2026
436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!

October 10, 2026
Next Post
சித்தா திரைப்பட இயக்குனருடன் இணைந்துள்ள சியான் விக்ரம்!

சித்தா திரைப்பட இயக்குனருடன் இணைந்துள்ள சியான் விக்ரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு