அம்பாறை கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில், சடலமொன்று கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்து, கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், 50 முதல் 55 வயது மதிக்கத் தக்க ஆணொருவரின் சடலமே கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.