கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று அழைக்கப்படவேளை எதிர்வரும் டிசம்பர் 14ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வழக்கை ஒத்திவைத்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மீது அவதூறாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குறித்த ஆறு பேரினதும் யூடியூப் மற்றும் முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (21-9-2026) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் மற்றும் சழுக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கடந்த 28-09-2026 நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துடன் எதிராளிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 4 பேர் ஆஜராகினர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அர்ச்சுனா, சார்பில் சட்டத்தரணி கௌசல்யா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
இதனை தொடர்ந்து குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 14ம் திகதிக்கு வழங்கப்படும் என திகதியிடப்பட்டு வழக்கை பதில் நீதவான் ஒத்திவைத்தார்.







