திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபருக்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அவரது மனைவியிடம் 12 கோடி ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அபேசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வீடொன்று முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக இந்த விடயம் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான சட்டத்தரணி ரபித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல சொகுசு வாகனங்கள் மற்றும் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மேல் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







