நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் 4,700 பேரை ஆசிரியர் உதவியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை எழுப்பிய வாய்மூலக் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 462 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் தொண்டர் ஆசிரியர்களை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.







