மண்முனைதென்மேற்கு பட்டிப்பளை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் வியாழக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச அபிவிருத்தி குழுத் இணைத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்
கடந்த காலங்களில் இப்பிரதேசங்களில் முன்னெ டுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும். எதிர் கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் ஆரம்பத்தில் அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக கட்சிசார்ந்து செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர்சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கிடையே பெரும் வாக்குவாதங்கள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமாகியது.
இவற்றில் குறிப்பாக படகுப் பாதை சேவைக்கு கட்டணம் அறவிடுவதுதொடர்பாக கலந்துரையாடப்பட்டது.பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும். அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம்| கட்டணம் அறவிடவேண்டும் எனவும், தீர்மானம் எடுக்கப்பட்டது. தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு மாவடி முன் மாரி பகுதிக்கான மயானத்திற்கான காணி ஒதுக்கீடு மற்றும் பட்டிப்பளைப் பிரதேச சபைக்கான திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான இட ஒதுக்கீடு தொடர்பாக பிரதேசசபை செயலாளர் மற்றும் பிரதேசசெயலக உத்தி யோதர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அபிவிருத்திக் குழுத் தலைவரின் ஆலோசனைக்கமைவாக இருதரப்பினரும் சமுகமாகக் கலந்துரையாடி இவ்விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவினை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மண்ணகழ்வு தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. பட்டிப்பளைப் பகுதியில் எதுவித மண் அகழ்வுக்கான அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும்,வவுணதீவு பிரதேசசெயலகப் பகுதியில் மண்ணகழ்வுக்கான அனுமதிப் பத்திரத்தினைப் பெற்று பட்டிப்பளை எல்லைப் பகுதியில் மண்ணகழ்வுகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டொன்று மூன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளைதீவிரமாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பட்டிப்பளைப் பகுதியிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவற்றினை நிவர்த்தி செய்து தரக்கோரியும், சில மண்ணகழ்வுதொடர்பாக பாடசாலைக் கட்டிடங்களையும் இதன் போது கலந்துரையாடி புனரமைப்பு செய்து தரக்கோரியும், கோட்டக்கல்வி பணிப்பாளரினால் கோரிக்கைகள் முன்வைக்கிப்பட்டது. இதற்கானநடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்து தருவதாகவும், கட்டிடங்களைத் திருத்துவதற்கான வேலைகளைத் தனியார் நிறுவனங்களூடாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இவற்றோடு பட்டிப்பளைப் பிரதேசத்திலுள்ள சுனையன் குடாப் பகுதியில் இதுவரை அடிக்கட்டுப் பசளை வழங் கப்படவில்லை என விவசாயிகளினால் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கேட்டு உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துரையாடி நாளைய தினத்திலிருந்து உரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.
அத்தோடு கடந்த காலங்களில் விவசாயச் செய்கைகளினால் பாதிக்கப் பட்டவிவசாயிகளுக்கான காப்புறுதி வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதற்கான நடவடிக்கை களை விரைவாக முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.