Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கப்படும்; நாடு ஒன்றின் அதிரடி!

குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கப்படும்; நாடு ஒன்றின் அதிரடி!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மடகாஸ்கர் நாட்டில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது.

அதன்படி, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. அதன்படி குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் நேற்று 12 மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரும் ஆதரவு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்த சட்டத்தின்படி, 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை அல்லது இரசாயனம் மூலம் ஆண்மை நீக்கப்படும்.

10 முதல் 13 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது இரசாயன முறையிலோ ஆண்மை நீக்கப்படும்.

14 முதல் 17 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும்.

அதேவேளை ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மடகாஸ்கர் அரசாங்கத்தில் தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்

தொடர்புடையசெய்திகள்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு
செய்திகள்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு

September 26, 2026
மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

September 26, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு

September 26, 2026
திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!

September 26, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்
செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

September 26, 2026
அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!
செய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!

September 26, 2026
Next Post
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான வீட்டுத்திட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான வீட்டுத்திட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு