Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு – பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இலங்கையில் அரச சேவை ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் பல்வேறு போட்டிப் பரீட்சைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் சின்னதம்பி பிரகாசன் தெரிவித்துள்ளார்.

சூரியனின் ‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான சேவைகளின் கீழ் சுமார் 12 முதல் 13 வகையான பிரதான சேவைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, கட்டிடக்கலை சேவை, விஞ்ஞான சேவை, பொறியியல் சேவை மற்றும் மருத்துவ அதிகாரிகள் சேவை உள்ளிட்ட சேவைகள் அடங்குகின்றன.

இந்தப் போட்டிப் பரீட்சைகளில் பங்கேற்பதற்கான அடிப்படைத் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெற்ற பட்டப்படிப்பு பொதுவாகக் காணப்படுவதாகவும், சேவைக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைய வயது வரம்புகள் மற்றும் ஏனைய தகைமைகள் மாறுபடக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் கணக்காளர் சேவை போன்ற போட்டிப் பரீட்சைகளுக்கு அதிகளவான விண்ணப்பதாரர்கள் தோற்றுகின்ற போதிலும், கட்டிடக்கலை மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட சில சிறப்புச் சேவைகள் தொடர்பில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இத்தகைய சேவைகளுக்கான போட்டிப் பரீட்சைகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக வெளியிடப்படும் தேசிய அளவிலான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான தகவல்களை வேலைதேடுவோர் உள்ளிட்ட தகுதியுடையவர்கள் அறிந்துகொள்வதுடன், அது தொடர்பான தகவல்களை ஏனையோருடனும் பகிர்ந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!
செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!

September 26, 2026
2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வெளியீடு!
செய்திகள்

2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வெளியீடு!

September 26, 2026
அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!
செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!

September 26, 2026
ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!
செய்திகள்

ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!

September 26, 2026
கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!

September 26, 2026
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்;  இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்; இருவர் கைது!

September 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.