Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

54 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தூதுக்குழுவினர் செப்டெம்பர் 24ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்து, சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான பேராசிரியர் ஸ்வென் சிமொன் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரால்ஃப் சீக்காட்ஸ், ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) குழுவின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான ஆலோசகர் பெஞ்சமின் ஒப்பர்மான், KAS சிங்கப்பூரின் ஆசியாவுக்கான பிராந்திய அரசியல் கலந்துரையாடல் திட்டத்தின் கொள்கை ஆலோசகர் ஜோனாஸ் நிட்ஷ்கே, KAS பிரஸ்ஸல்ஸின் சர்வதேச அபிவிருத்திக் கொள்கை கலந்துரையாடல் திட்ட முகாமையாளர் ஸ்வென் நிக்கொலாய், சட்டத்தரணியும் IDAG நிறுவனத்தின் பதிவாளரும் பணிப்பாளருமான சி.ஏ.ஹெட்டியாராச்சி மற்றும் IDAG நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் எஸ்.விமலாகுணரத்ன ஆகியோரும் இத்தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினரை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன வரவேற்றதுடன், இலங்கை பாராளுமன்றத்திற்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் இரு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்மட்டப் பரிமாற்றங்களை சபாநாயகர் நினைவுகூர்ந்தது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈடுபாட்டிற்கு தனது பாராட்டைத் தெரிவித்தார். இது இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கும் சர்வதேச தரநிலைகளைப் பேணுவதற்கான அதன் முயற்சிகளுக்கும் பங்களிப்புச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல், ஊழலை எதிர்த்துப் போராடுதல், நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் மற்றும் பெண்களின் உரிமைகளை மேலும் மேம்படுத்துவதற்கான பொறிமுறைகளை நிறுவுதல் உள்ளிட்ட துறைகளில் இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுக்குழுவிற்கு விளக்கமளித்தார்.

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிகளவிலான உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமை, ஜனநாயக ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகியன குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கை பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இலங்கையின் அரசியல் மற்றும் சமூகச் சூழல், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் சுமுகமான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டனர்.

இக்குழுவினர் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலியை சந்தித்தனர். அரசியலமைப்புத் திருத்தச் செயற்பாடு, இலங்கையின் அரசியல் முறைமை மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமை தொடர்பில் சுமுகமான கலந்துரையாடலையும் நடத்தியிருந்தனர்.

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றமும் ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்கு பிரதி சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இலங்கை மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் இத்தகைய ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தூதுக்குழுவினர் தனித்தனியான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோரையும், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, சம்பிக்க ஹெட்டிஆராச்சி ஆகியோரையும் சந்தித்திருந்தனர்.

இக்கலந்துரையாடல்களில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமை, நாடு எதிர்நோக்கும் சவால்கள், அரசியலமைப்பின் இருபத்திரண்டாவது திருத்தத்தின் பின்னணி மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினர் சபாநாயகர் கலரியிலிருந்து சபை நடவடிக்கைகளையும் பார்வையிட்டதுடன், சபாநாயகர் சபையில் அறிவிப்பை வெளியிட்டு அவர்களை வரவேற்றார்.

மேலும், தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர். இதன்மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு

September 26, 2026
திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!

September 26, 2026
அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!
செய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!

September 26, 2026
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!
செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!

September 26, 2026
2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வெளியீடு!
செய்திகள்

2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வெளியீடு!

September 26, 2026
அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!
செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!

September 26, 2026
Next Post
திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!

திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.