Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

43 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இரு இடங்களில் இடம்பெற்றன.

காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டிலும், மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு அருகில் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அமரர் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.

இதேவேளை, காந்தி சிலைக்கு அருகில் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இ.சிறிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் மாநகர முதல்வர் சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி காலை 10.48 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஒரே இடத்தில் இரு தனித்தனி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு
செய்திகள்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு

September 26, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு

September 26, 2026
திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!

September 26, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்
செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

September 26, 2026
அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!
செய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!

September 26, 2026
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!
செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!

September 26, 2026
Next Post
தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு