Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டனில் ஈழத்தமிழர்கள் முன்னெடுத்த கறுப்பு நாள் போராட்டம்; பிரித்தானிய அரசிடம் முறையிடவுள்ளாராம் அலி சப்ரி!

லண்டனில் ஈழத்தமிழர்கள் முன்னெடுத்த கறுப்பு நாள் போராட்டம்; பிரித்தானிய அரசிடம் முறையிடவுள்ளாராம் அலி சப்ரி!

3 years ago
in செய்திகள்

இலங்கையின் 76வது சுதந்திர தின நாளில் லண்டனில் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக தமது அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு தெரிவிக்கவுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் தேசத்தின் ‘கறுப்பு நாளாக’ குறிப்பிட்டு 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் மத்திய லண்டனில் பேரணி நடத்தினர்.

மத்திய லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘தமிழீழம் ஒன்றே தீர்வு’, ‘போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, இது திட்டமிட்ட இனப்படுகொலை’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணி உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து புறப்பட்டு, ஹைட் பார்க் பிளேஸ், மார்பிள் ஆர்ச், டிராஃபல்கர் சதுக்கம் வழியாக பாராளுமன்ற சதுக்கத்தை நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை
செய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

September 18, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!

September 18, 2026
சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய  சாணக்கியன்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய சாணக்கியன்!

September 18, 2026
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!
செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!

September 18, 2026
Next Post
கிராம உத்தியோகத்தர் பதவிக்கு நேர்முகப்பரீட்சை!

கிராம உத்தியோகத்தர் பதவிக்கு நேர்முகப்பரீட்சை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு