Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு!

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய 14.02.2024 அன்று புதன்கிழமை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம் பெற்றது.

நிகழ்வு – 1
பாற்குடபவனி

மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாற்குடபவனியானது ஆரையம்பதி செல்வாநகர் சிவன் ஆலயத்திலிருந்து பிரதான வீதியினூடாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்தது.

நிகழ்வு – 2
ஆலய சங்காபிஷேக கிரியைகள்

சங்காபிஷேக கிரியைகள் யாவும் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு வேதாகம குருமணி கிரியா ஜோதி சாமஸ்ரீ தேசமான்ய சிவஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சங்காபிஷேக கிரியைகளின் போது உதவிக் குருக்களாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய குரு சைவ நன்மணி சிவஸ்ரீ ஜெ.ஜெய்ப்பிரதாபன் சர்மா அவர்களும் ஆரையம்பதி வைத்தியசாலை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய குரு
சிவஸ்ரீ செ.சிந்துஜன் ஐயா அவர்களும் பங்கேற்றனர்.

நிகழ்வு – 3
அன்னதான நிகழ்வு

சங்காபிஷேக கிரியைகள் யாவும் நிறைவுற்றதும் ஆலய நிருவாகத்தினரால் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

நிகழ்வு – 4
வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு

சங்காபிஷேக நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் ஆரையம்பதியைச் சேர்ந்த சமூக சேவையாளரான திரு.ஏகாம்பரம் மகேந்திரன் அவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் சிறுவர் பெண்கள் பிரிவினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் வறிய மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வறியவர் ஒருவருக்கான உலர் உணவுப் பொதியும் உதவிப் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டமை விசேட நிகழ்வுகளாக அமைந்தது.

இந் நிகழ்வுகள் அனைத்தும் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஆலய நிருவாகத்தினர் ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
குடு சலிந்துவின் உதவியாளர் துபாயில் கைது!

குடு சலிந்துவின் உதவியாளர் துபாயில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.