மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் நேற்று இரவு (16) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதியே விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி – சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் குழந்தை, பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேசமயம் விபத்திற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை என்பதுடன், இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.