Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா

அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா

1 hour ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மறைந்த முஸ்லிம் அரசியல் தலைவர் அஷ்ரப்புக்குப் பின்னர், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் குரல் கொடுத்து வருவதாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (02) நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமக்கு எதிராகவும் ஆறு முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகவும் இடைக்காலக் கட்டளையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், வழக்கு விசாரணைக்காகத் தனது சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான காரணங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த வழக்கின் அடிப்படை நோக்கம், மத ரீதியாக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதாகத் தாம் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டுவதே எனக் குறிப்பிட்ட அவர், தாம் இனவாதம் மற்றும் மதவாதத்தைக் கடந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, புத்தளம் மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலைகளில் முஸ்லிம் மக்களுக்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் அநீதிகள் தொடர்பிலும், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பிலும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தாம் குரல் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, கல்முனை வைத்தியசாலையில் ஆறு முஸ்லிம் பெண்களுக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு அலுவலகம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு சமூகத்தின் மத அடையாளங்களை அகற்றுவதற்குச் சட்டங்களைப் பயன்படுத்துவது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக அமையும் எனத் தெரிவித்த அர்ஜுனா, இந்து ஒருவர் கையில் மத அடையாளமாக நூல் அணிவதைத் தடை செய்வதும் அதேபோன்று அரசியலமைப்புக்கு முரணானதாகும் என உதாரணப்படுத்தினார்.

அதேபோன்று, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் என்பது அவர்களது மத உணர்வுடன் தொடர்புடைய விடயம் எனவும், அது தொடர்பில் தாம் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்த பின்னரே இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தமக்கு வாக்களித்தவர்களில் முஸ்லிம் மக்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்ட அவர், இன மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்காகத் தான் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், நீதிமன்றம் இந்த விடயம் தொடர்பில் உரிய முறையில் தீர்ப்பை வழங்கும் என நம்புவதாகவும் இராமநாதன் அர்ஜுனா மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் அந்த பதிவிக்கு தகுதியற்றவர்; சிறிநேசன்!
செய்திகள்

மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் அந்த பதிவிக்கு தகுதியற்றவர்; சிறிநேசன்!

November 3, 2026
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

November 3, 2026
வழக்கை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை; யோஷிதவின் பாட்டியை விடுவித்த நீதிமன்றம்!
செய்திகள்

வழக்கை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை; யோஷிதவின் பாட்டியை விடுவித்த நீதிமன்றம்!

November 3, 2026
கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!
செய்திகள்

கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!

November 3, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!

November 3, 2026
ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!
செய்திகள்

ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!

November 3, 2026
Next Post
கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!

கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு - இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு