மியன்மாரின் காவலில் உள்ள மீன்பிடி படகுகளின் தலைவர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
மீன்பிடி படகுகளை செலுத்தியவர்களுக்கே 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 மீனவர்களுக்கும் தலா 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுமன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி
மியன்மாரின் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இலங்கை மீனவர்கள் இரண்டு மீன்பிடி படகுகளுடன் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் கல்பிட்டி மற்றும் நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக சென்றவர்களாகும்.
குறித்த மீனவர்கள் கடந்த வருடம் 12/02ஆம் திகதி மியன்மார் அரசால் கைது செய்யப்பட்டதாகவும் தூதுவர் ஜனக பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.