Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண ஆளுநரை எச்சரித்துள்ள கிழக்கின் கேடயம்!

கிழக்கு மாகாண ஆளுநரை எச்சரித்துள்ள கிழக்கின் கேடயம்!

3 years ago
in செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் ஆளுநர், பிரதம செயலாளர், 05 அமைச்சுக்களின் செயலாளர்கள் என முக்கிய 7 பதவிகள் இருக்கின்றன. காலாகாலமாக இப்பதவிகள் இனப்பரம்பலுக்கு ஏற்ப பங்கீடுகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆளுநராக சிங்கள இன சகோதரர் நியமிக்கப்டுகின்ற வேளையில் ஏனைய பதவிகளுக்கு முறையே 3 முஸ்லிம், 2 தமிழ், 1சிங்களம் என்ற அடிப்படையில் இன சகோதர அதிகாரிகள் நியமிக்கப்படுவது தார்மீகமாகும். இது அவ்வாறில்லாமல் இம்முறை முற்றாக மீறப்பட்டுள்ளது என கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

கிழக்கின் கேடயம் சார்பில் அவர் வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் எமது அரசியல் தலைவர்கள் எடுத்துக் கூறாமை அல்லது ஆளுநர் வரலாறுகளை அறிந்து கொள்ளாமை அல்லது இனப்பற்றில் சுயத்தை இழந்தமை என கூறலாம்.

200 வருடங்கள் இந்நாட்டில் பெரும் ககஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்த மக்களுக்கு வாக்குரிமையை பெற்று கொடுத்தார் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான். அதன்பின்னர் இன்று வரை அந்த மக்கள் முழுமையான வாழ்க்கைச் சுட்டெண்ணுக்கு அருகிலும் வரவில்லை. இவ்வாறானதொரு சமூகத்தில் இருந்து ஆளுநர் பதவியை பெற்றுக்கொண்ட செந்தில் தொண்டமான் எவ்வளவு கவனமாக நடந்திருக்க வேண்டும்.

அரசியல் பழிவாங்கல் நடைபெறும் மாகாணத்தில் தனது நடவடிக்கைகள் மூலம் இவ்வாறுதான் மக்கள் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்ற முன்மாதிரியை காட்டியிருக்க வேண்டும் அது நடைபெறவில்லை என்பது வேதனைக்குறிய விடயமாகும். இன்னும் காலம் தாழ்ந்து போகவில்லை விரைந்து செயற்பட்டு தவறுகளை திருத்தி சிறந்த ஆளுநர் என்பதை செய்து காட்ட வேண்டும்.

மீண்டும் இதே தவறு நடைபெறும் என்றால் கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் நிறுவனங்கள் அமைப்பிடம் முறையிடுவோம். அங்கே எங்களது மக்களை உங்களின் கூட்டங்களை புறக்கணிக்க தீர்மானம் மேற்கொள்ள வேண்டுவோம் என தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
Next Post
உயிர் தப்பிய ரஷ்மிகா மந்தனா; இந்திய ஊடகங்கள் செய்தி!

உயிர் தப்பிய ரஷ்மிகா மந்தனா; இந்திய ஊடகங்கள் செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு