Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் பகுதியிலும் துப்பாக்கி கலாசாரம்; ஒரு கிராமத்தையே குறி வைப்பதாக குற்றச்சாட்டு!

தமிழர் பகுதியிலும் துப்பாக்கி கலாசாரம்; ஒரு கிராமத்தையே குறி வைப்பதாக குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

சாதாரண பொது மக்களிடம் உள்ள ஆயுதக் கலாச்சாரத்தை உடன் நிறுத்துவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மன்னார் நொச்சிக்குளம் பகுதி மக்கள் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

துப்பாக்கி சூடு கொலையில் ஈடுபடும் நபர்கள் இனம் காட்டப்பட்டும் சட்டத்திலிருந்து இவர்கள் தப்பித்து வருவதால் ஒரு கிராமம் தொடர்ந்து அல்லோலகல்லோலப் படுகின்றது என தெரிவித்து இக் கவனயீப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் உயிலங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிஒரு சூட்டு சம்பவம் ஒன்றைத் தொடர்ந்தே இன்று (19) காலை மன்னார் மதவாச்சி பிரதான வீதியை மறித்து நொச்சிக்குளம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது, இன்று (19) காலை 8 மணியளவில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேளையில் ஒரு மோட்டர் வண்டியில் வந்த இரு நபர்கள், ஏகே என்ற பெரிய துவக்கின் மூலம் அந்த விவசாயி மீது சுட்டபோதும் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது மட்டுமல்லாது கடந்த சில காலமாக இந்த கிராமத்து மக்களின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி, இதுவரையில் மூவர் இறந்துள்ளதாகவும், இந்த கிராமத்துக்கு பொலிஸ் காவல் போடப்பட்டும் அதையும் மீறி கொலை கலாச்சாரம் தொடர்வதாக தெரிவித்தே இன்று இவ்வூர் மக்கள் கையில் பதாதைகள் ஏந்தி வீதி மறியல் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

இவர்கள் எந்தியிருந்த பதாதைகளில் ‘கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யர்?’ ‘எங்களை பாதுகாப்பது அரசின் கடமை’ ‘எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்’ எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா? யார் தருவது’ போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் தொட்ர்பாக சந்தேக நபர்கள் இனம் காட்டப்பட்டதாக பாதிப்படைந்தவர்கள் தெரிவித்தும் நிற்கின்றனர்.

இது தொடர்பாக தற்பொழுது உயிலங்குளம் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
யாழ் பிரபல ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

யாழ் பிரபல ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு