இபலோகம பிரதேசத்திலுள்ள கடையொன்றில் நேற்று(18) கொள்வனவு செய்யப்பட்ட யானைக்கர்த்தான் எனப்படும் இனிப்பு பண்டத்தில் இறந்த பல்லியொன்று காணப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் இபலோகம MOH அலுவலகத்திற்கு குறித்த நபர் தகவல் வழங்கியுள்ள நிலையில், இனிப்பு பண்டத்தை வாங்கிய நபர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இபலோகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இனிப்பு பண்டத்தை உற்பத்தி செய்த தம்புள்ளை – இனாமலுவ பகுதியிலுள்ள பேக்கறி மீது இதற்கு முன்னரும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இபலோகம MOH அலுவலகம் தெரிவித்துள்ளது.