Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது மத்ரஸா பாடசாலை மாணவன் மரணம்; மேலும் 4 சந்தேக நபர்கள் கைது!

சாய்ந்தமருது மத்ரஸா பாடசாலை மாணவன் மரணம்; மேலும் 4 சந்தேக நபர்கள் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சாய்ந்தமருது மத்ரஸா பாடசாலையில் உயிரிழந்த காத்தான்குடி மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான CCTV காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப் பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் CCTV தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வழக்கு, கடந்த வியாழக்கிழமை (15) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய CCTV காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று (20) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு CCTV தொழிநுட்பவியலாளர் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் 30 26 22 23 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவர்.

அத்துடன் கைதான 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் நாளை(21) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நீதிமன்ற தவணையின் போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதவான், அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்திருந்ததுடன் நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி மாணவன் மரணம்; விசாரணை அதிகாரியின் அறிக்கையில் வெளிவந்த உண்மை!

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செய்திகள்

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

August 5, 2026
கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
Next Post
அரசாங்க சலுகைகளுக்காக 17 முறை கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு சிறை!

அரசாங்க சலுகைகளுக்காக 17 முறை கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு சிறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.