அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு இன்று (04) தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
2026 வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய உருவாக்கப்பட்ட இந்த 15 உறுப்பினர் ஆணைக்குழு, அரசு ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள், ஓய்வூதிய முறை மற்றும் அரச சேவை சீர்திருத்தங்கள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததுடன், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட தனியான ஆணைக்குழு அமைக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் குறிப்பிட்டார்.







