கொழும்பில் இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் சில மோசடி வியாபாரிகள், தரமற்ற, செயல்படாத எலக்ட்ரானிக் பொருட்களை அதிக விலைக்கு விற்று, மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம, அதுருகிரியா, நுகேகொட மற்றும் பல பிரதேசங்களில் உள்ள மக்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
அந்த பொருட்களில் நுளம்பு விரட்டும் இயந்திரம் 1200 ரூபாய், ரீசார்ஜ் செய்யும் மின்விளக்குகள் 2500 ரூபாய் உள்ளிட்ட ஏராளமான மின்சாதனங்கள் உள்ளதாகவும், அவற்றை வாங்கி பயன்படுத்த முயற்சித்த போது மின்சாதனங்கள் பழுதடைந்து சில பாகங்கள் காணாமல் போனதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
விற்பனை செய்பவர்களில் சிலரின் தொலைபேசி இலக்கங்கள் பாவனையில் இல்லை எனவும், சில தொலைபேசிகளுக்கு பதிலளிக்க ஆள் இல்லை எனவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தபால் மூலம் பொருட்கள் வழங்கப்படுவதால், பொருட்களை சரிபார்த்து, பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
உடைந்த பொருட்களை மீள ஒப்படைக்க ஒருவரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மக்கள் செய்வதறியாது தவிக்கும் நிலையில் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி இவ்வாறான ஏமாற்றுக்காரர்களுக்கு எதிராக தேவையான சட்டங்களை இயற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.