மின்சார சபை ஊடக பேச்சாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு இடத்தில் மின்சாரத்தை பொருத்துவதற்காக சென்ற தந்தை உயிரிழந்த சம்பவத்தில் அவரை அவமதித்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த பின்னணியில் மின்சார சபை ஊடக பேச்சாளர் பதவி விலகியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை இன்று சபையில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, மாணவர்களை விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்குமாறு தெரிவிப்பது ஒரு அவமதிக்கும் செயலாகும்.
அத்துடன் பெருந்தோட்ட பகுதியினர் அதிகளவில் மதுபானம் அருந்துவதாகவும் மின்சார சபை ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். இது தனிப்பட்ட நபரையும் பெருந்தோட்ட சமூகத்தையும் அவமதிக்கும் கருத்தாகும்.எனவே மின்சார சபையின் இந்த கருத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.