கலஹா, லூல்கந்துர தோட்டத்திலுள்ள அறையில் தற்காலிகமாக வசிக்க வந்த இளம் ஜோடி ஐந்து மாத கைக்குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் வசிப்பவர்கள் என கூறப்படும் இந்த ஜோடி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தோட்டத்திலுள்ள லயன் அறையில் தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.
இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மூதாட்டி உண்மையிலேயே இவர்களது உறவினரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும், குறித்த மூதாட்டி மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதே காரணம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதாட்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த பொலிஸார், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வெளிநாடு செல்லும் நோக்கில் தற்காலிகமாக தம்பதியினர் வீட்டிற்கு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தோட்ட நிர்வாகத்திற்கு இளம் தம்பதிகள் வழங்கிய தகவலின்படி, அவர்கள் இருவரும் 21 வயதுடையவர்கள் என்று தெரிவித்துள்ளதாகவும், நேற்று முன்தினம் லயன் அறை ஒன்றில் வசிப்பவரைத் தொடர்பு கொண்டுள்ளதோடு, தாம் வெளிநாடு செல்கிறோம் என்றும், அறையில் உள்ள குழந்தையை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்றும், யாராவது பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பின்னர், இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடம் அவர் அறிவித்துள்ளார் அந்த தோட்டத்தின் குடும்ப சுகாதார சேவையாளரால் குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
பாலூட்டும் வசதி இல்லாத காரணத்தினால் குழந்தை பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக கலஹா தெல்தோட்டை வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரி கபில் அத்தபத்து தெரிவித்தார்
சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குழந்தையின் பெற்றோர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி நேற்று முன்தினம் (22) பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் வேலை செய்யவில்லை.
குழந்தையின் தாயும் தந்தையும் உண்மையில் வெளிநாடு சென்றிருந்தார்களா அல்லது
அவர்கள் இன்னும் நாட்டில் மறைந்து இருக்கிறார்களா என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.