Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தர் சிலையை அகற்றி விட்டோம்; ஆயர் இல்லத்திற்கு அறிவித்த கடற்படை!

புத்தர் சிலையை அகற்றி விட்டோம்; ஆயர் இல்லத்திற்கு அறிவித்த கடற்படை!

3 years ago
in முக்கிய செய்திகள்

கச்சதீவு அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக கடற்படை உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ். மாவட்டசெயலருக்கு கடிதம் மூலமாக அவர் அறிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளன.

இவ்விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கச்சதீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் தாங்கள்(அரச அதிபர்) கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப் பட ஆவன செய்யுமாறும் கேட்டு கடந்த மார்ச் 27 ஆம் திகதி வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதற்கமைய தாங்கள் மேற்கொண்டநடவடிக்கைகளுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் – என்றுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!
செய்திகள்

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

July 24, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!

July 24, 2026
Next Post
மீண்டும் பரவும் கோவிட் தொற்று!

மீண்டும் பரவும் கோவிட் தொற்று!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு