Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போரில் படுகொலைகளை மாத்திரம் விரும்பிய தேரர்கள்; கிழக்கு மாகாண மக்கள் அழிக்கப்பட்டதை அம்பலப்படுத்திய பிக்கு!

போரில் படுகொலைகளை மாத்திரம் விரும்பிய தேரர்கள்; கிழக்கு மாகாண மக்கள் அழிக்கப்பட்டதை அம்பலப்படுத்திய பிக்கு!

2 years ago
in செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவுக்கு கொண்டு வர ஒரு சில பௌத்த தேரர்கள் முயற்சித்திருந்ததாக தேசிய சமாதான பேரவையின் உறுப்பினரான பேராசிரியர். பல்லேகல ரத்னசார தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும், சில இனவாத தேரர்கள் இராணுவ வெற்றியை மாத்திரம் கருத்தில் கொண்டு இந்த போரின் போது செயல்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய சமாதான பேரவையால் நேற்று 29 கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நல்லிணத்துக்காக சமயங்கள் எனும் தொனிப்பொருளின் கீழான சர்வமத மாநாட்டில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தின் போது, நாம் தமிழ் மக்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.

ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொல்ல நடவடிக்கை எடுத்திருந்தார்கள். கிழக்கு மாகாணத்தில் இருந்த வீடுகள் மற்றும் கல்வி கற்றவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரும் அழிக்கப்பட்டார்கள்.

நாம் அப்போது கொழும்பில் உள்ள எமது விகாரைகளில் தமிழ் மக்களை மறைத்து வைத்திருந்தோம். அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி பாதுகாத்தோம்.

அன்று முதல் நாம் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்காக செயல்பட்டோம். வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேறிய போது புத்தளத்தில் அவர்கள் தங்க நாம் உதவினோம்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பௌத்த பிக்குகளை பேச்சுவார்த்தைகளுக்காக அழைத்தார். இதற்கேற்ப தேரர்கள் குழுவொன்று அவருடன் ஐந்து நாள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது.

பேச்சுவார்த்தைகளின் மூலம் வடக்கில் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் என சிலர் கோரினாலும் 90 வீதமானோர் போரில் வெற்றியடைவதை பற்றியே பேசினார்கள்.

நாம் எமது இராணுவத்தினரை எதிர்க்கவில்லை. எனினும், போர் வெற்றி தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் சகோதரர்கள் இருவருக்கிடையிலான போரை போன்றது.

உக்ரைன்-ரஷ்யா யுத்தமும் சகோதரர்கள் இருவர்களுக்கிடையிலான போர். இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற போர் நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த தேசிய சமாதான பேரவை அமைக்கப்பட்டது.

நாம் பல கூட்டங்களை நடத்தி, மக்கள் மத்தியில் காணப்பட்ட பிரிவினைகளை நீக்க நடவடிக்கை எடுத்தோம். இதனை தொடர்ந்து இலங்கையில் இடம்பெறவிருந்த இனவாத செயற்பாடுகளை நாம் தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம்“ என தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!
செய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

July 31, 2026
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!
செய்திகள்

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!

July 31, 2026
பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!
செய்திகள்

பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!

July 31, 2026
சிறையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியைப் பார்க்க வந்த இருவர் போதையுடன் சிக்கினர்; மட்டக்களப்பில் பொலிஸ் அதிரடி!
செய்திகள்

சிறையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியைப் பார்க்க வந்த இருவர் போதையுடன் சிக்கினர்; மட்டக்களப்பில் பொலிஸ் அதிரடி!

July 31, 2026
தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!
செய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!

July 30, 2026
முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!
செய்திகள்

முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!

July 30, 2026
Next Post
13 வயது இரட்டையர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு; 05 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை!

13 வயது இரட்டையர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு; 05 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு