இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நேற்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் தலா 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

13 வயதுடைய இரண்டு ஆண் இரட்டையர்கள் தேரர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் யந்திரம் மந்திரம் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுகவீனமடைந்ததையடுத்து பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காக இந்த நபரிடம் கொண்டு சென்றனர்.
சிறுவனை சில நாட்கள் அங்கேயே வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று தேரர் அங்குள்ள பெற்றோரிடம் கூறியதாகவும், அதன்படி அவர்கள் சிறுவனை அங்கேயே தங்க வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், இரட்டை பிள்ளைகளில் மற்றையவர் தனது சகோதரர் இல்லாமலேயே கவலை அடைந்திருந்த நிலையில், தேரர் காரில் வீட்டுக்கு வந்து அந்தக் சிறுவனையும் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் தேரர் பிள்ளைகள் இருவரையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன்,இரண்டு இரட்டை பிள்ளைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.