கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு நகர் பகுதியை அண்மித்த மாமாங்கம், புன்னைச்சோலை, அமிர்தகழி போன்ற கிராமங்களிலுள்ள சில கடைகளில் முட்டைகளின் விற்பனையை காணமுடியாதுள்ளது.
மேற்குறித்த பிரதேச கடைகளில் முட்டைகளை கொள்வனவு செய்யவரும் வாடிக்கையாளர்களுக்கு ” முட்டை இல்லை” என்ற ஒரே பதிலை சொல்லி திருப்பியனுப்புகின்றனர் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். முட்டையின் விற்பனை அலகாக எண்ணிக்கை இருந்த வேளையில் ஒரு முட்டையின் விலையானது 60- 65 ரூபா வரையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது அதன் விற்பனை அலகாக கிலோ கிராம் மாற்றப்பட்ட பின்னர் ஒரு முட்டையின் விலை 45 இலிருந்து 50 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக விற்பனையாளர் முட்டைகளை வைத்து கொண்டே இல்லையென திருப்பியனுப்புவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.