Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மீதான அமெரிக்காவின் இன்னுமொரு அதிரடி நடவடிக்கை; கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட முன்னாள் தளபதி!

இலங்கை மீதான அமெரிக்காவின் இன்னுமொரு அதிரடி நடவடிக்கை; கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட முன்னாள் தளபதி!

3 years ago
in முக்கிய செய்திகள்

வடமேற்கு மாகாண ஆளுநரான வசந்த கரன்னாகொட, 2023 இராஜாங்கத் திணைக்களம், வெளிநாட்டுச் செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய நிகழ்ச்சித்திட்டங்கள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 7031(உ) இன் படி, அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் நடவடிக்கையின் விளைவாக கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஸ்ரீமதி அசோக கரன்னாகொட ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி ஜே பிளிங்கன் அறிவித்துள்ளார.

அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சுயாதீன விசாரணைகளாலும் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு பாரிய மனித உரிமை மீறல்களை வசந்த கரன்னாகொட மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கள், பாரதூரமானதும் நம்பகமானதும் ஆகும்.

எனவே வசந்த கரன்னாகொடவை கறுப்புப்பட்டியலில் இணைப்பதன் மூலம், மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் துன்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவு, 75 வருட பகிரப்பட்ட வரலாறாகும். அத்துடன் மதிப்புகள் மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ- பசிபிக்க்கான அர்ப்பணிப்பின் அடிப்படையிலானதாகும். இருதரப்பு உறவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது.

அதேநேரம், அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்யவும் இது உதவும் என்றும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி ஜே பிளிங்கன் அறிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் கரண்ணாகொட முக்கியமானவராக பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!
செய்திகள்

எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!

June 9, 2026
மட்டு மீனவரிடம் 30000 கப்பம் வாங்கிய பொலிஸார்-அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்
காணொளிகள்

மட்டு மீனவரிடம் 30000 கப்பம் வாங்கிய பொலிஸார்-அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்

June 9, 2026
கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு
செய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு

June 9, 2026
தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
Next Post
அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்கள் அதிகரிப்பு; வர்த்தமானி வெளியிட்டது அரசு!

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்கள் அதிகரிப்பு; வர்த்தமானி வெளியிட்டது அரசு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு